அவரை இழப்போம்‌ என எண்ணியதே இல்லை: எச்.வசந்தகுமாருக்கு சிம்பு இரங்கல்

உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும் விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் என துவக்கி வைத்தவர். கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தை கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர்… குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர். சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால் இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை. ஏற்க முடியாத இழப்பு இது. மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள விஜய்
 

அவரை இழப்போம்‌ என எண்ணியதே இல்லை: எச்.வசந்தகுமாருக்கு சிம்பு இரங்கல்

உழைக்கும்‌ வர்க்கத்தின்‌ உதாரணம்‌. படிப்படியாக வாழ்க்கையில்‌ முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக்‌ கொள்ள வேண்டும்‌ தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும்‌ விளம்பரங்களில்‌ பிராண்டின்‌ முதலாளியே நடிக்கலாம்‌ என துவக்கி வைத்தவர்‌.

கன்னியாகுமரி மக்களின்‌ முன்னேற்றத்தை கனவு கண்டவர்‌. அதற்காக உழைத்தவர்‌…

குடும்பத்தின்‌ மீது செலுத்தும்‌ தீவிர அன்பை வலிமையாக்கிக்‌ கொண்டவர்‌. சூட்ட நிறைய புகழாரங்கள்‌ உண்டு. ஆனால்‌ இவ்வளவு விரைவில்‌ அவரை இழப்போம்‌ என எண்ணியதே இல்லை.

ஏற்க முடியாத இழப்பு இது. மீளா துயரத்தில்‌ ஆழ்ந்துள்ள விஜய்‌ வசந்த்‌ மற்றும்‌ வினோத்‌ குமார்‌, இருவரும்‌ தோள்‌ சாய்ந்து கொள்ள தோழனாக நான்‌ நிற்பேன்‌. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு எச்‌.வசந்த குமார்‌ அவர்களை இழந்துவாடும்‌ குடும்பம்‌, வாடிக்கையாளர்கள்‌, ஊழியர்கள்‌, தொகுதி மக்கள்‌ என அனைவருக்கும்‌ எனது ஆறுதலைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அவரின்‌ ஆன்மா இறைவன்‌ மடியில்‌ இளைப்பாற வேண்டிக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு நடிகர் சிம்பு, மறைந்த எச்.வசந்தகுமார் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னதாக சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர், ‘கல்வி தந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் தீவிர தொண்டன், பார்ப்பதற்கு எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர், பக்குவப்பட்ட பண்பாளர், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.H.வசந்த குமார் அவர்கள் நேற்று (28 August) இயற்கை எய்தியதாக வந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்தியது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அவரை இழப்போம்‌ என எண்ணியதே இல்லை: எச்.வசந்தகுமாருக்கு சிம்பு இரங்கல்

From around the web