சிம்பு படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்: நாயகி யார்?

 

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது இன்று முதல் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தில்  சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவிருப்பதாகவும் மேலும் இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது

யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கினாலும் சிம்பு மற்றும் நிதி அகர்வால் ஆகிய இருவரும் வரும் 8ம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை முப்பதே நாட்களில் முடித்துவிட்டு அதன்பின்னர் மாநாடு படப்பிடிப்புக்கு சிம்பு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web