தளர்வுக்கு பின் ஆரம்பிக்கப்படும் முதல் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு எது தெரியுமா? பரபரப்பு தகவல்

தமிழக அரசு நேற்று செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான ஊரடங்கின் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த அறிவிப்பில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் 75 பேர்களுக்கு மிகாமல் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது மேலும் இன்று மாலை திரைப்படக்குழுவினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தாமல் இருந்த திரைப்படக் குழுவினர்
 
தளர்வுக்கு பின் ஆரம்பிக்கப்படும் முதல் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு எது தெரியுமா? பரபரப்பு தகவல்


தமிழக அரசு நேற்று செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான ஊரடங்கின் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த அறிவிப்பில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் 75 பேர்களுக்கு மிகாமல் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

மேலும் இன்று மாலை திரைப்படக்குழுவினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தாமல் இருந்த திரைப்படக் குழுவினர் தற்போது திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் சிம்பு, ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களை அழைத்து எப்பொழுது ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது. இந்த ஆலோசனையில் சிம்பு மற்றும் மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், கூட்டமாக இருக்கும் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளை ஒரு மாதத்தில் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டமாக இருக்கும் காட்சிகளை படமாக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

அனேகமாக தளர்வுகள் அறிவித்தவுடன் ஆரம்பிக்கப்படும் முதல் படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் படமாகத்தான் இருக்கும் என்று கோலிவுட்டில் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web