சினிமாவில் இருந்து விலகிய சிம்பு பட நடிகை: கணவர் தான் காரணமா?


 

 

சிம்பு நடித்த சிலம்பாட்டம் உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சனாகான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மனித குலத்திற்கு சேவை செய்ய விரும்புவதால் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருந்தார்

ஆனால் அவர் சினிமாவில் இருந்து விலகுவதற்கு உண்மையான காரணம் தொழிலதிபர் முஃப்தி என்பவரை திருமணம் செய்து கொள்வதுதான் என்பது பின்னர் தெரியவந்தது. சினிமாவில் இருந்து விலகிய ஒரு சில வாரங்களிலேயே அவர் முஃப்தியை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தனது திருமணத்தை இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் என்பதும் தேனிலவு சென்ற படங்களையும் அவர் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

sanakhan

இந்த நிலையில் சினிமாவிலிருந்து சனாகான் விலகியதற்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்றும் அவர் சினிமாவில் இருந்து விலகியதாக அறிவித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் முஃப்தி கூறினார். மேலும் சனா தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தான் நான் விரும்பினேன் என்றும் ஆனால் சனாகான் தான் தானாகவே சினிமாவில் இருந்து விலகி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார் 

சனாகான் சினிமாவில் இருந்து விலகியதற்கு அவரது கணவர் காரணம் என்று யாருமே குற்றம் சாட்டாத நிலையில் அவரே முன்வந்து நான் காரணமில்லை என்று கூறியிருப்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சனா தனது கணவரின் கட்டாயத்தின் காரணமாக தான் சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். உண்மை என்ன என்பது சனா கான் மற்றும் அவரது கணவருக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web