பார்த்திபனின் இரண்டு படங்களில் சிம்பு: பரபரப்பு தகவல் 

 

பார்த்திபன் நடித்து சூப்பர் ஹிட்டான இரண்டு படங்களின் இரண்டாம் பாகங்கள் சிம்பு நடிக்க இருப்பதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பார்த்திபன் நடித்து சூப்பர் ஹிட்டான ’புதிய பாதை’ மற்றும் ’உள்ளே வெளியே’ ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்க பார்த்திபன் திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களிலும் பார்த்திபன் நடித்த கேரக்டர்களில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

ஒரு படத்தை பார்த்திபனே இயக்க இருப்பதாகவும் இன்னொரு படத்தை பார்த்திபனின் உதவி இயக்குநர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் மாறி மாறி உருவாக்குமாறு சிம்பு கால்ஷீட் கொடுத்த உள்ளதாகவும் கூறப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web