திடீரென திரையுலகில் இருந்து விலகிய சிம்பு நாயகி: என்ன காரணம்?

 

தன்னை படைத்த கடவுளுக்கு தான் சேவை செய்ய செய்ய போவதால் திரையுலகில் இருந்து விலகுவதாக சிம்பு பட நாயகி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ என்ற திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் சனாகான். இவர் சமீபத்தில் விஷால் நடித்த அயோக்யா’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சனாகான் திடீரென தான் திரையுலகில் இருந்து விலகுவதாகவும் இனிமேல் தன்னிடம் யாரும் சினிமா குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார் 

தன்னை படைத்த கடவுளின் கட்டளையின் பேரில் மனித குலத்திற்கு சேவை செய்யப் போவதாகவும் அதனால் தான், திரையுலகில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

இதுகுறித்து சனா கான் தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web