சபரிமலையை அடுத்து காசிக்கு சென்ற சிம்பு: வைரலாகும் புகைப்படங்கள்!

 

நடிகர் சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருந்தார் என்பதும் சிம்பு தனது நண்பர் மகத் உடன் ஐயப்பன் கோவிலுக்கு சென்றார் என்பதும் தெரிந்ததே

சிம்பு ஐயப்பன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று உள்ளதாக தெரிகிறது 

simbu mahat kasi

காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்யும் புகைப்படத்தை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்திலும், மற்ற சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். சிம்பு மற்றும் மகத் உள்ள அந்த ஆன்மீக போஸ் வைரலாகி வருகிறது

மேலும் இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் சிம்பு, மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் அடுத்த கட்ட மாநாடு படப்பிடிப்பு ஒரு மாதம் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது என்பதும் அத்துடன் மாநாடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு சிம்பு, ‘பத்துதல’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


 

From around the web