ரசிகர்களுக்கு இரட்டை பொங்கல் விருந்து தரும் சிம்பு!

 

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் பார்த்தோம்

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொங்கல் விருந்தாக சிம்பு ரசிகர்களுக்கு ஈஸ்வரன் கிடைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு விருந்து கிடைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

maanadu

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கல் விருந்தாக வெளியாக இருப்பதாகவும் சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகவிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த அறிவிப்பை அடுத்து வரும் பொங்கல் தினத்தில் சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை விருந்து என்பது உறுதியாகியுள்ளது

தற்போது ஐயப்பன் கோவிலுக்கு சென்று காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று உள்ள சிம்பு சென்னை திரும்பியதும் மாநாடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது மாநாடு படத்தை முடித்துவிட்டு அவர் ’பத்துதல’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதன் பிறகு வரிசையாக 3 படத்தில் அவர் ஒப்பந்தமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web