செம மாஸ் காட்டி பக்காவா வந்து இறங்கிய சிம்புவின் ஈஸ்வரன் ட்ரெய்லர்

பாசம், ஆக்ஷன், காதல் என்று எல்லாம் கலந்த கலவையாக ஈஸ்வரன் படம் அமைந்திருப்பது ட்ரெய்லரிலேயே நன்றாகத் தெரிகிறது.

 

தன் உடல் எடையை வெகுவாக குறைத்த பிறகு சிம்பு நடித்துள்ள முதல் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். 

பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 8ம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அறிவித்தபடி ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

அவன் ஜல்லிக்கட்டு காளைடா, சும்மா சும்மாலாம் வரமாட்டான். ஆனால் முடிவு பண்ணி களத்துல இறங்கிட்டானு வை. அன்னைக்கு தான் உனக்கு, எனக்கு, மொத்த ஊருக்கும் பொங்கல் என்று ஒருவர் சொல்ல சிம்பு என்ட்ரி கொடுக்கிறார். ஈஸ்வரா நம்ம கன்ட்ரோல் நம்ம கையில தான் இருக்கணும் என்று நிதி அகர்வால் சொல்ல, ஆனால் என் கன்ட்ரோல் என் கையில இல்லையே என்கிறார் சிம்பு என செமையாக தெரிக்கவிட்டுள்ளனர்.

From around the web