இளையதளபதி ‘தளபதி’ ஆனதுபோல் சூப்பர் ஸ்டாருக்கு ஆசைப்படும் ‘சிம்பு’

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இளையதளபதி என்று அழைக்கப்பட்டு வந்த விஜய் தற்போது தளபதி என்று அழைக்கப்படுகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் சில வருடங்களுக்கு முன்புவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வந்த சிம்பு தற்போது சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்படுவது போல் தெரிகிறது என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர் 

சிம்பு நடித்துவரும் ஈஸ்வரன் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது 

rajinikanth

இந்த நிலையில் இந்த டீசரில் சிம்புவின் அறிமுக காட்சி அச்சு அசலாக அப்படியே காலா படத்தில் வரும் ரஜினிகாந்தின் அறிமுக காட்சி போலவே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் மோஷன் போஸ்டரில் இருந்த பின்னணி இசைதான் டீசரின் பின்னணி இசையாகவும் இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்த சிம்பு தற்போது சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்படும் வகையில் அவரது படம் போலவே அறிமுக காட்சிகளை வைக்கக் சிம்பு கோரியதாகவும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தான் விரைவில் செல்வேன் என்று நம்பிக்கையுடன் அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அஜித், விஜய் உள்பட பல நடிகர்கள் ஆசைப்பட்டு கொண்டிருக்கும்போது அந்த பட்டியலில் தற்போது சிம்புவும் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web