இனி தியேட்டர்கள் தேவையில்லை: பிள்ளையார் சுழி போடும் திரைப்படம்

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த ‘சில நேரங்களி’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் என்ற செயலி மூலம் இன்று முதல் வெளியாகிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குவதில்லை என்றும், அப்படியே ஒதுக்கினாலும் தேவையான அல்லது நல்ல திரையரங்குகள் கிடைப்பதில்லை என்றும் இதனால் சின்ன பட்ஜெட் படத்தில் இயக்குனர் கூறிய விஷயங்கள் மக்களை சென்றடைவதில்லை என்றும் கடந்த சில ஆண்டுகளாக குறை கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ‘சில சமயங்களில்’ படத்தை
 

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த ‘சில நேரங்களி’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் என்ற செயலி மூலம் இன்று முதல் வெளியாகிறது.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குவதில்லை என்றும், அப்படியே ஒதுக்கினாலும் தேவையான அல்லது நல்ல திரையரங்குகள் கிடைப்பதில்லை என்றும் இதனால் சின்ன பட்ஜெட் படத்தில் இயக்குனர் கூறிய விஷயங்கள் மக்களை சென்றடைவதில்லை என்றும் கடந்த சில ஆண்டுகளாக குறை கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ‘சில சமயங்களில்’ படத்தை தயாரித்த ஐசரிவேலன், பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோர் இந்த படத்தை நேரடியாக ஆன்லைனில் இன்றுமுதல் ரிலீஸ் செய்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெற்றால் வரும் காலங்களில் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

From around the web