தனது மகளுடன் பொது பேருந்தில் பயணம் செய்த சிவகார்த்திகேயன்...

தனது மகள் ஆராதனாவுடன் பொது பேருந்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பயணம் செய்துள்ளார்.
 

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நட்சத்திரமாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் ரம்சான் பண்டிகை அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆராதனா எனும் அழகிய மகள் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் தனது மகள் ஆராதனாவுடன் பொது பேருந்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பயணம் செய்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

From around the web