தொடங்குகிறது த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு: அனைவருக்கும் கொரோனா டெஸ்ட்

 

மோகன்லால் மீனா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதோடு தமிழில் கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் ரீமேக் ஆனது என்றும் இந்த ரீமேக் படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது 

அது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை முதல் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது 

மோகன்லால் மீனா மீண்டும் இணைய உள்ள இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார் என்றும் படக்குழுவினர் அனைவரும் கடந்த 15 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அவர்களுக்கு பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டதால் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நாளை படப்பிடிப்பு தொடங்கினாலும் மோகன்லால் வரும் 26ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்றும், முதல்கட்டமாக கொச்சியிலும், அடுத்ததாக திருவனந்தபுரத்திலும் அதன்பின்னர் ஒருசில காட்சிகள் சென்னையிலும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

From around the web