40 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு, தீபாவளிக்கு டீசர்: சிம்புவின் பக்கா பிளான்

 
40 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு, தீபாவளிக்கு டீசர்: சிம்புவின் பக்கா பிளான்

சிம்பு ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கவே வருடக் கணக்கில் ஆகும் என்பது பல வருடங்களாக நடந்து வரும் நிகழ்வுகளாகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட மாநாடு திரைப்படம் கூட எப்பொழுது அடுத்தகட்ட படப்பிடிப்பு, எப்போது படப்பிடிப்பு முடியும் எப்ப்போது ரிலீஸ் என்ற திட்டம் இல்லாமலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 40 நாட்களில் முடிந்து விட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 

சிம்புவின் படம் நாற்பதே நாட்களில் முடிந்து விட்டதை அறிந்து அவரது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளிவரும் என்றும் இந்த படத்தை பொங்கல் அன்று வெளியிட இருப்பதாகவும் சிம்பு தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். எனவே சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் உள்ளனர் 

சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வரும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் திங்கள் முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

From around the web