பிக் பாஸ் கொடுத்த ஷாக்… அதிர்ந்து போன அரங்கம்!!

வார இறுதி என்றாலே கமல் ஹாசன் போட்டியாளர்களை கேள்வி கேட்பார். ஆனால் இறுதிக் கட்டம் என்பதால் அவரும் கேள்விகளைத் தவிர்த்து, போட்டியாளர்களை பாராட்டி வருகிறார். இறுதியில் எவிக்சனுக்கு வந்து சேர்ந்தார். இந்தவாரம் கோல்டன் டிக்கெட்டை வென்ற முகினைத் தவிர அனைவரும் நாமினேட் ஆகினர். இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் 3 மெடல் ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்து வரச் சொன்னார் கமல். அதில், முதலில் உள்ளதை சாண்டியை அணிந்து கொள்ளச்
 
பிக் பாஸ் கொடுத்த ஷாக்… அதிர்ந்து போன அரங்கம்!!

வார இறுதி என்றாலே கமல் ஹாசன் போட்டியாளர்களை கேள்வி கேட்பார். ஆனால் இறுதிக் கட்டம் என்பதால் அவரும் கேள்விகளைத் தவிர்த்து, போட்டியாளர்களை பாராட்டி வருகிறார். இறுதியில் எவிக்சனுக்கு வந்து சேர்ந்தார்.

இந்தவாரம் கோல்டன் டிக்கெட்டை வென்ற முகினைத் தவிர அனைவரும் நாமினேட் ஆகினர். இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

பிக் பாஸ் கொடுத்த ஷாக்… அதிர்ந்து போன அரங்கம்!!


நேற்றைய நிகழ்ச்சியில் 3 மெடல் ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்து வரச் சொன்னார் கமல். அதில், முதலில் உள்ளதை சாண்டியை அணிந்து கொள்ளச் செய்தார்.

அடுத்து ஷெரினை அழைத்த கமல் ஹாசன் யாருக்க போட விரும்புகிறீர்கள் என்று கேட்க, அவர் தர்சனுக்கு போட விரும்புவதாக சொன்னார்.

கமல் இடைமறித்து லாஸ்லியாவிற்கு போட சொன்னார். இறுதியில், 3ஆவது மெடலை எடுக்க சொன்னார். எடுத்த ஷெரினை அவர் கழுத்திலேயே போட்டுக்கொள்ளச் சொன்னார்.

அதே நேரத்தில், கமல் ஹாசன் எவிக்‌ஷன் கார்டில் உள்ள தர்ஷன் பெயரை பார்வையாளர்கள் முன்னிலையில் காண்பித்தார். அரங்கத்தில் இருந்த பலரும் விம்மி அழத் துவங்கிவிட்டனர்.

உண்மையிலேயே பிக் பாஸ் இப்படி ஒரு ஷாக் கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web