பாலாஜியை சந்திக்காமல் போன ஷிவானியின் அம்மா: என்ன காரணம்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரன ஷிவானியை பார்ப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று வந்த அவரது அம்மா, பாலாஜியை சந்தித்து பேசாமல் போயிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
பிக்பாஸ் வீட்டில் பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் காதல் செய்வதாக காட்சிகள் அமைந்தாலும் இருவரும் அதனை உறுதி செய்யவில்லை. ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளர்கள் இருவரின் ரொமான்ஸை ரசித்தனர் என்பது குறிப்பிடதக்கது
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஷிவானியின் தாயார் ஷிவானியை கண்டித்ததாக தெரிகிறது. ஷிவானியிடம் அவர் ஆவேசமாக பேசும் காட்சிகள் இன்றைய இரண்டாம் புரமோவில் உள்ளது இதனை அடுத்து தன்னால் தான் எல்லாம் நடந்ததோ என்று பாலாஜி மிகவும் வருத்தத்துடன் ரம்யாவிடம் ஆஜித்திடமும் புலம்பிக் கொண்டிருக்கிறார்
ஷிவானியின் அம்மா வெளியே சென்றவுடன் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போய் விட்டார்களே ஷிவானி அம்மா என்று பாலாஜி மிகவும் வருத்தத்துடன் ஆஜித்துடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவரது கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலாஜியை மட்டும்தான் சந்திக்காமல் சென்றாரா அல்லது ஷிவானி தவிர யாரையுமே சந்திக்காமல் சென்றாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்தால் தான் தெரியவரும்
#Day86 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/boMKWG0o5O
— Vijay Television (@vijaytelevision) December 29, 2020