பிக்பாஸில் மீண்டும் ஷிவானியின் அம்மா: ஒரு ஆச்சரிய தகவல்!

 

இந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்க் நடந்தது என்பதும் அதில் ஷிவானியின் அம்மா முதல் நபராக வந்து ஷிவானியை சந்தித்து கண்டித்தார் என்பதையும் பார்த்தோம். ஷிவானி தனது அம்மாவின் ஆவேசத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் என்பதும் அம்மாவின் வருகைக்கு பின்னர் பாலாஜியுடன் அவர் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் ஷிவானியை அவருடைய அம்மாவின் வருகை முற்றிலும் மாற்றி விட்டது என்றே கூறலாம் இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியிலும் ஷிவானியின் அம்மா ஜும் செயலி வழியாக கமல்ஹாசனிடம் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

shivani

தான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதும், அங்கு தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் கமல்ஹாசனிடம் ஷிவானியின் அம்மா பகிர்ந்து கொள்ளும் காட்சிகள்,  தனது மகளை கண்டித்தது தனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் ஆனால் அது தேவைப்பட்டது என்று அவர் கூறுவது கூறுவதாகவும்தகவல்கள் வெளிவந்துள்ளன

கமல்ஹாசனும் ஷிவானியின் அம்மாவை பாராட்டியது பாராட்டியதாக கூறப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் மீண்டும் ஷிவானியின் அம்மா தோன்ற இருப்பது ஷிவானியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது

From around the web