லாஸ்லியா தந்தை கேட்ட அதே கேள்வியை கேட்ட ஷிவானி தாயார்!

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின்போது லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது லாஸ்லியாவிடம் கேட்ட அதே கேள்வியை இன்று ஷிவானியின் தாயார் ஷிவானியிடம் கேட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் வீட்டில் காதல் என்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் லாஸ்லியா மற்றும் கவின் காதல் குறித்து அவரது தந்தை கண்டித்து சரமாரியாக கேள்வி கேட்டார். இதனை அடுத்து லாஸ்லியாவும் கவினும் மிகுந்த வருத்தம் அடைந்தனர் 

அதேபோல் இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் காதல் பறவைகளாக வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று உறவினர்கள் போட்டியாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகிறது என்பதால், ஷிவானியின் தாயார் முதல் நபராக உள்ளே வந்து தனது மகளை சந்திக்கிறார் 

shivani

முதல் கட்டமாக இருவரும் கட்டிப்பிடித்து உணர்ச்சிகளை வெளிப்படுத்திய நிலையிலும் தனியாக உட்கார்ந்து பேசுகின்றனர். அப்போது நீ எதற்காக இந்த ஷோவிற்கு வந்தாய்? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இங்கே செய்வது எதுவும் வெளியே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என்று ஷிவானியை கண்டிக்கும் வகையில் கேள்வி கேட்கிறார்

இந்த கேள்வியை சற்றும்  எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் பதில் பேச முடியாமல் உள்ளார் ஷிவானி. இந்த காட்சிகள் முதல் புரமோவில் உள்ளன. இந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்க் என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


 

From around the web