மிக்சரை விட்டுவிட்டு வாழைப்பழத்திற்கு மாறிய ஷிவானி: அனிதா கிண்டல் 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரை நாமினேஷன் செய்யும் படலம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாமினேஷன் படலத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேஷன் செய்தனர்

அப்போது அனிதா நாமினேஷன் செய்ய வந்தபோது ஷிவானி பெயரை கூறினார். இந்த 78 நாட்களில் ஷிவானி என்ன செய்தார் என்பதே எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று அனிதா கிண்டலுடன் கூறியபோது, ஷிவானி வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்த காட்சிகள் புரமோ வீடியோவில் ஒளிபரப்பானது 

shivani

இதுவரை மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போட்டியாளர் என்று பார்வையாளர்கள் ஷிவானியை கேலியும் கிண்டலும் செய்து வரும் நிலையில் அனிதா அவரைப் பற்றி கூறும்போது வாழைப்பழம் சாப்பிடும் வகையில் செமையாக எடிட்டிங் செய்து இந்த எடிட்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 

எடிட்டர் குசும்புக்காரன் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த வாரம், ஆரி, அனிதா, ஆஜித், ஷிவானி மற்றும் கேபி ஆகிய ஐவர் நாமினேட் செய்திருப்பது முதல் புரமோவில் இருந்து தெரிய வருகிறது

From around the web