ரியோவுக்கு குடை பிடித்த ஷிவானி: புதிய காதலா?

 
ரியோவுக்கு குடை பிடித்த ஷிவானி: புதிய காதலா?

பிக்பாஸ் சீசன் 4 காதலர்களாக பாலாஜி மற்றும் ஷிவானி இருந்த நிலையில் தற்போது திடீரென பாலாஜி-ஷிவானி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பாலாஜியின் பார்வை சுசித்ராவின் பக்கம் சென்றதையடுத்து கடுப்பான ஷிவானி, அவரிடம் இருந்து விலகி இருப்பதையே விரும்புவதாக கடந்த சில நாட்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன 

மேலும் பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் ஷிவானியுடன் நடித்த அஜிம் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்கு வர உள்ளதை அடுத்து ஷிவானியின் பார்வை அஜீம் மீது மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது 

shivani rio

இந்த நிலையில் திடீரென ரியோவுடன் ஷிவானி நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியின்போது ஷிவானி ரியோவுக்கு குடை பிடித்ததும், ரொமான்ஸாக பேசியதும், ரியோவை பார்த்து ஷிவானி வெட்கப்பட்டதையும் பார்க்கும்போது புதிய காதல் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது

மொத்தத்தில் பாலாஜி-ஷிவானி காதல் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்படுகிறது. ஏற்கனவே உன் மேல் எனக்கு காதல் வராது, வந்தால் சொல்கிறேன் என பாலாஜி ஷிவானியிடம் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web