ஷிவானி, சனம்ஷெட்டிக்கு அதிக வாக்குகள்: வெளியேறும் போட்டியாளர் யார்?

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற இருக்கும் முதல் எவிக்சன் பிராசஸிங் வெளியேறும் போட்டியாளர் யார் என்ற கேள்வியை அந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது 

இந்த வாரம் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், சனம்ஷெட்டி, ஆஜித், கேப்ரில்லா, சம்யுக்தா மற்றும் ரேகா ஆகிய 7 பேர்கள் உள்ளனர். இவர்களுக்கு வாக்களிக்கும் படலமும் தற்போது நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஷிவானி நாராயணனுக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வர வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருடைய இன்ஸ்டாகிராமில் இருக்கும் இரண்டு மில்லியன் பேர்கள் வாக்களித்தால் போதும் அவர் அனைத்து நாமினேஷனில் இருந்தும் தப்பித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டிக்கும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஏழு பேர்களில் ரேகா மற்றும் சம்யுக்தா ஆகிய இருவருக்கு மட்டுமே குறைவான வாக்குகள் கிடைத்து உள்ளதாகவும் இந்த இருவரில் ஒருவர் குறிப்பாக ரேகா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 

இருப்பினும் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web