ஷிவானி-ரம்யா பாண்டியன்: பிக்பாஸ் வெளியிலும் தொடரும் போட்டி 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் பெயர்கள் இடம் பெற்றதாக தகவல் வெளிவந்தவுடன் இருவருக்கும் சரியான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராமில் இருவருக்கும் இடையே தான் கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதில் போட்டி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், வெளியே இன்ஸ்டாகிராமில் அவர்கள் இருவரது பக்கங்களிலும் தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அவர்களுடைய அட்மின்கள் இந்த போட்டியை விடாமல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வீடியோவில் ஷிவானியின் செம டான்ஸ் காட்சிகள் உள்ளது. அதே போல் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கருப்பு உடையில் அவர் இருக்கும் அழகான கவர்ச்சி புகைபடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் போட்டி தொடர்ந்து வருவது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

♥️ # teamshivaninarayanan #bigbosstamilseason4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web