சீரியசாக சண்டை போட்ட ஷிவானி: அடுத்த வாரமும் காப்பாற்றப்படுவாரா?

 

பிக் பாஸ் வீட்டில் மிக்சர் மட்டுமே சாப்பிட்டு கொண்டு எந்த வகையிலும் தனித்தன்மையை வெளிப்படுத்தாமல் இருக்கும் போட்டியாளர்கள் என ஆஜித் மற்றும் ஷிவானியை பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர் 

இருப்பினும் அந்தந்த வாரங்களில் பிரச்சினைக்குரிய போட்டியாளர்களை பார்வையாளர்கள் வெளியேற்றுவதால் மிக்சர் போட்டியாளர்கள் தப்பித்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாலாவின் அரவணைப்பில் தான் ஷிவானி விளையாடுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென நேற்று பாலா மற்றும் ஷிவானி இடையே சண்டை வந்தது 

bala shivani

ஒரு பந்து குழாயின் வழியாக வந்து கொண்டிருக்கும்போது அந்த பந்தை ஷிவானி தட்டி விட்டதாக பாலா குற்றம் சாட்டினார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் பாலா கூறிய ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு ஷிவானி கோபமடைந்து ஆவேசமாக கத்தினார். ஷிவானிகு கூட இப்படி கோபம் வருமா என்ற என்று பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டனர். மொத்தத்தில் பாலா மற்றும் ஷிவானி காதல் பறவைகளாக இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென இருவருக்கும் முட்டிக் கொண்டது மற்ற போட்டியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

ஷிவானி தானும் போட்டியில் இருப்பதாக தனது கோபத்தின் மூலம் நிரூப்பித்துள்ளதால் அவர் இந்த வாரமும் காப்பாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

From around the web