பள்ளி பருவத்தில் ஷிவாங்கி எப்படி இருக்கிறார் பாருங்க!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. 

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். 

போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

முக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. 

ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஷிவாங்கி அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 

தற்போது கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் க்யூட்டான ஷிவாங்கி பள்ளி படிக்கும் பொழுது எப்படி இருந்திருப்பார் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்நிலையில் பள்ளி சீருடை அணிந்து தனது தோழிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web