சீரியலில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வரும் குக் வித் கோமாளி நடிகர்கள்...

ஷிவாங்கி, பாலா இருவரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
 

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது. பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் தான்.

கடந்த சில நாட்களாகவே இந்த சீரியல்களின் மெகா சங்கமம் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தந்த கதைக்கு ஏற்றவாரு எல்லா காட்சிகளையும் வைத்து வருகிறார் இயக்குனர்.

இந்த சீரியல்களின் மெகா சங்கமத்தில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் இரண்டு சீரியல்களுக்குமே இயக்குனர் பிரவீன் பென்னட் தான்.

சீரியலில் ஒரு பெரிய போட்டி ஒன்று நடந்து வருகிறது, அதற்கு நடுவர்களாக அண்மையில் பிக்பாஸ் பிரபலங்களான ரியோ, சம்யுக்தா, சோம சேகர் வந்திருந்தனர்.

அந்த சீன்கள் கூட அண்மையில் ஒளிபரப்பானது. அடுத்து என்ன நடக்கும் என்று பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் இந்த இரண்டு சீரியல் குழுவினருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

அதாவது ஷிவாங்கி, பாலா இருவரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

எனவே இவர்கள் இருவரும் சீரியலில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வர இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

From around the web