எட்டு வயதிலேயே அனிமேஷன் வீடியோ செய்த ஷில்பாஷெட்டி மகன்: ஆச்சரிய தகவல் 

 

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் பிரபு தேவாவுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

இவருக்கு எட்டு வயதில் ஒரு மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் தனது மகன் வியான் அனிமேஷன் வீடியோ ஒன்று செய்ததாகவும் அந்த வீடியோ தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவியின் அடிப்படையில் இந்த அனிமேஷன் வீடியோ உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் ஷில்பா ஷெட்டியின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது திறமைகளை பார்த்து தலை வணங்குவதாகவும் அவரை நினைத்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

From around the web