அய்யோ வனிதா இங்க விட்டு போய்டீயே- கதறிய ஷெரின்

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், டாஸ்க்குகள் டஃபாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது. அந்தப் பாட்டிலிருந்தே தெரிந்திருக்கும் இனி டாஸ்க் வேற லெவல் தான் என்று. பிக் பாஸ் 2வில் டாஸ்க்குகள் மிகக் கடினமாக இருந்தது எனவும், தற்போது மிக எளிதாக உள்ளது எனவும் பல புகார்கள் வெளியில் எழுந்த வண்ணமே உள்ளன என்பது
 
அய்யோ வனிதா இங்க விட்டு போய்டீயே- கதறிய ஷெரின்

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், டாஸ்க்குகள் டஃபாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது. அந்தப் பாட்டிலிருந்தே தெரிந்திருக்கும் இனி டாஸ்க் வேற லெவல் தான் என்று. பிக் பாஸ் 2வில் டாஸ்க்குகள் மிகக் கடினமாக இருந்தது எனவும், தற்போது மிக எளிதாக உள்ளது எனவும் பல புகார்கள் வெளியில் எழுந்த வண்ணமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யோ வனிதா இங்க விட்டு போய்டீயே- கதறிய ஷெரின்

வனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, காலை உணவிற்கு சாண்டி தோசை செய்தார், “அப்போது இனி வனிதா அக்கா இல்லாம எப்டி சமைக்கிறோம் பாருங்க” என்று கூற, இனி இப்படித்தான் சமைக்கணும்போல என்றார் தர்சன்.

பேசாம டையட் இருக்கலாம் என்று சாண்டி சொல்லிக்கொண்டே தோசை சுட்டார். அவர் செஃப் போல அங்கும் இங்கும் அட்டி தோசை சுட்டதில், தோசைக்குள் வண்டு விழுந்துவிட்டது.

அய்யய்யோ என்று தர்சன் பதற, நீங்க நான் வெஜ் சாப்டுவீங்க தானே? என்று கிண்டலடிக்க, பதறிப்போன ஷெரின் “அய்யோ வனிதா இங்க விட்டு போய்டீயே” என்று ஷெரின் கதறியது சிரிப்பை வரவழைத்தது.

From around the web