சாண்டியிடம் தங்க முட்டையினை பறி கொடுத்த ஷெரின்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் 2 டாஸ்க்குகள் பகல் பொழுதில் முடிந்துவிட, அனைவரும் டையர்டு ஆகிப் போயினர். இரவு அனைவரும் தூங்கப் போக, அந்நேரத்தில் லைட்டை அஃப் செய்த பிக் பாஸ், மீண்டும் லைட் போட்டு 7 வது டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதாவது கார்டன் ஏரியாவில் ஒரு தங்க முட்டை வைக்கப்பட்டிருக்கும், அதனை யாரும் உடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் முட்டைகளை அவர்களுக்கு தெரியாமல்
 
சாண்டியிடம் தங்க முட்டையினை பறி கொடுத்த ஷெரின்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் 2 டாஸ்க்குகள் பகல் பொழுதில் முடிந்துவிட,  அனைவரும் டையர்டு ஆகிப் போயினர்.

இரவு அனைவரும் தூங்கப் போக, அந்நேரத்தில் லைட்டை அஃப் செய்த பிக் பாஸ், மீண்டும் லைட் போட்டு 7 வது டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதாவது கார்டன் ஏரியாவில் ஒரு தங்க முட்டை வைக்கப்பட்டிருக்கும், அதனை யாரும் உடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் முட்டைகளை அவர்களுக்கு தெரியாமல் உடைக்க வேண்டும். அப்படி தெரியும்படி உடைத்துவிட்டால், அவர்கள் அவுட் ஆகிவிடுவர்.

சாண்டியிடம் தங்க முட்டையினை பறி கொடுத்த ஷெரின்!

அதன்படி விடிய விடிய பிக் பாஸ் வீட்டில் யாரும் தூங்காமல் முட்டையினை பாதுகாத்துக் கொண்டிருந்தனர், காலையில் பொழுதே விடிந்துவிட்டது, ஆனாலும் யாரும் தூங்கவில்லை.

இதற்கிடையே சாண்டி, ஷெரின் முட்டையினை உடைக்க முயற்சிக்கையில், ஷெரின் பார்த்துவிட சாண்டி அவுட் ஆகிவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் டாஸ்க் தொடர்ந்தது, அதில் ஷெரின் தூங்கிவிட அவர் முட்டையும் உடைக்கப்பட்டது. அதன்பின்னர் ஷெரினும் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட, அவர் தூங்க சென்றுவிட்டார்.

பிக் பாஸ் இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறினார். அதனால் போட்டியாளர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

From around the web