முதல் முறையாக நாமினேட் ஆனார் ஷெரின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார். விறுவிறுப்பை எல்லாம் தூக்கி ஓரம் கட்டிவிட்டு காதல், பாசம் என தமிழ் சினிமா போல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ், நேற்றைய நிகழ்ச்சியும் வழக்கம்போல் ஆரம்பமானது. அதனையடுத்து, குளிப்பதன் முக்கியத்தும் குறித்து பேச வேண்டும் என்று
 
முதல் முறையாக நாமினேட் ஆனார் ஷெரின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி  இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார்.

விறுவிறுப்பை எல்லாம் தூக்கி ஓரம் கட்டிவிட்டு காதல், பாசம் என தமிழ் சினிமா போல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ், நேற்றைய நிகழ்ச்சியும் வழக்கம்போல் ஆரம்பமானது.

முதல் முறையாக நாமினேட் ஆனார் ஷெரின்!!

அதனையடுத்து, குளிப்பதன் முக்கியத்தும் குறித்து பேச வேண்டும் என்று சாண்டிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

அதன்படி, குறைவான நீரில் எப்படி குளிப்பது என்று போட்டியாளர்கள் அனைவருக்கும் சாண்டி எடுத்துரைத்தார். 

கவினும், லாஸ்லியாவும் சிவப்புநிற என்ட்ரி டோர் அருகே பேசிக் கொண்டிருந்தனர், அதனை சாண்டி, முகின், தர்ஷன் ஆகியோர் கண்ணாடி ஜன்னலுக்கு அந்தப்புறம் இருந்து கவனித்தனர். 

அதன்பின்னர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. சேரன் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருப்பதால் அவரை நாமினேட் செய்யமுடியாது என பிக் பாஸ் அறிவித்தார்.

இதனால் யாரை நாமினேட் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கவின், முகின், வனிதா, ஷெரீன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இதில் கவின் 5 வாக்குகளும், வனிதா, ஷெரின், முகென் ஆகியோர் 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். பிக் பாஸ் தொடங்கி 75 நாட்கள் ஆகியுள்ளநிலையில், ஷெரின் நாமினேட் ஆகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

From around the web