சால்வைக்கு சால்வை! வாழ்த்துக்கு நன்றி!பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சென்று வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்!
 
udhyanithi

சட்டமன்றத் தேர்தல் ஆனது நடைபெற்று வாக்குப் பதிவு முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையோடு முதல்வராக உள்ளார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகஸ்டாலின். தற்போது அவர் சட்டமன்ற தேர்தலில் மதிமுக, விசிக ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து அமோக வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்தன.  இந்த சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சினிமா பிரபலங்கள் சிலர் தான். அந்த வரிசையில் தற்போது மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் முக ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின்.vaiko

அவர் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு இருந்தார்.அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் அவர் தற்போது தனது கூட்டணி கட்சியின் பொதுச்செயலாளர் வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிற.து அதன்படி அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு சால்வை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் வைத்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவையும் அன்பான நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அதன்படி,"தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக உழைத்தவர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். என்னை உள்ளன்போடு வாழ்த்திய அண்ணன் அவர்களுக்கு நன்றி. "இவ்வாறாக அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

From around the web