பிரம்மாண்ட படத்தின்' ரீமேக்கில் 'ஷங்கர்'.. யார் ஹீரோ தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் விக்ரமை வைத்து கொடுத்த அந்நியன் திரைப்படம் ஹிட் அடித்தது.

 
பிரம்மாண்ட படத்தின்' ரீமேக்கில் 'ஷங்கர்'.. யார் ஹீரோ தெரியுமா?

அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இயக்கவிருப்பதாக ஷங்கர் புகைப்படத்துடன் கூடிய பிரம்மாண்ட அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள ஷங்கர், தமது ட்விட்டர் பக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் தயாரிப்பாளருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அனைவருமே பிளாக் தீமில் உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் திரைப்படத்தை எடுத்து ஹிட் கொடுத்த ஷங்கர் இப்போது கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஒருபுறம் இருக்க, இப்படத்துக்குப் பின்னர் ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமானார்.

தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அத்தனை பிரதான மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தான் இந்த அறிவிப்பை ஷங்கர் பதிவிட்டுள்ளார். அந்நியன் படத்தின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கத்தில் ரன்வீர் சிங்குடன் இணைவதாகவும், இந்த தருணத்தில் தன் போல் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web