'இந்தியன் 2’ படத்தை கிடப்பில் போட்ட ஷங்கர்: அடுத்த பட அறிவிப்பு

 

கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஷங்கர் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு புதிய படத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார் 

ஷங்கரின் அடுத்த படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா. இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தை முடித்துவிட்டு ஷங்கர் இயக்கும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

shankar

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உட்பட கிட்டத்தட்ட இந்தியாவின் 10 மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் ரூபாய் 200 கோடி பட்ஜெட் இந்த படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீவாரி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் 50-வது திரைப்படமான இந்த படம் ஷங்கரின் புதுப் பரிணாமத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் தனது புதிய படத்தை அறிவித்துள்ளதால் ’இந்தியன் 2’ படத்தை கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது


 

From around the web