27 வருடங்கள் கழித்து இரண்டாம் பாகமாகும் ஷங்கர் படம்!

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் ஒன்றின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு 27 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது 

 

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் ஒன்றின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு 27 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த திரைப்படம் ஜென்டில்மேன். 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது 

ஆனால் தற்போது 27 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஷங்கர் மற்றும் குஞ்சுமோன் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளதால் இந்த படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பு இல்லை என்பதும் அறிமுக இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது 

ஆனால் அதே நேரத்தில் அர்ஜுன் இந்த படத்தில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பை சற்றுமுன் கேடி குஞ்சுமோன் அறிவித்து உள்ளார் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் அவர் அறிவிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web