ஷங்கர் உள்ளிட்ட 23 பேர்களிடம் விசாரணை: பரபரப்பு தகவல்

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் கீழே விழுந்து ஷங்கரின் உதவி இயக்குனர் உள்பட மூவர் மரணம் அடைந்தனர் இந்த விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர் ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் சங்கர் ஆகியோரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து முடித்துவிட்ட நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் ஷங்கர்
 
indian 2
ஷங்கர் உள்ளிட்ட 23 பேர்களிடம் விசாரணை: பரபரப்பு தகவல்

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் கீழே விழுந்து ஷங்கரின் உதவி இயக்குனர் உள்பட மூவர் மரணம் அடைந்தனர்

இந்த விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர் ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் சங்கர் ஆகியோரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து முடித்துவிட்ட நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

ஷங்கர் உள்பட மொத்தம் 23 பேர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணைக்கு கமலஹாசன் வர வேண்டிய அவசியமில்லை என்றும் தேவைப்பட்டால் அவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்கலாம் என்றும் நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web