இந்தியன் 2 படத்தில் இருந்து ஷங்கர், கமல்ஹாசன் விலகுகின்றார்களா? அதிர்ச்சி தகவல்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இந்தியன் 2 ’ இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதிலிருந்தே பிரச்சினைகள் மேல் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தன. எனவே இந்த படம் முழுவதும் முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே ஏற்பட்டது இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாகவும் நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் கொரோனா
 

இந்தியன் 2 படத்தில் இருந்து ஷங்கர், கமல்ஹாசன் விலகுகின்றார்களா? அதிர்ச்சி தகவல்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இந்தியன் 2 ’

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதிலிருந்தே பிரச்சினைகள் மேல் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தன. எனவே இந்த படம் முழுவதும் முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே ஏற்பட்டது

இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாகவும் நிறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து படங்களின் பட்ஜெட்டுகளும் குறைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2’ படத்தின் பட்ஜெட்டையும் பாதியாக குறைக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்தது

ஆனால் அதே நேரத்தில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு செய்யப்படும் செலவுகளை குறைக்க முடியாது என்பதால் ஷங்கர், கமலஹாசன் மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர்களின் சம்பளத்தை பாதியாக குறைக்க லைக்கா நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது

ஆனால் இந்த வேண்டுகோளை கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகிய இருவரும் புறக்கணித்து விட்டதாகவும் சம்பளத்தை பாதியாக குறைவாக இருந்தால் தாங்கள் இருவரும் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறி விட்டதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்

From around the web