21 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் ஷாலினி அஜித்!!!

21 வருடங்களுக்கு பிறகு நடிகை ஷாலினி நடிக்கவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

தளபதி விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி.

இதன்பின் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஷாலினி, நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு எந்தொரு திரைப்படத்திலும் ஷாலினி நடிக்கவில்லை.

இந்நிலையில் 21 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறாராம் நடிகை ஷாலினி. ஆம் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாய் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் ஷாலினி.

இயக்குனர் மணிரத்னம் படம் என்பதால் தல அஜித்தும் இதற்கு ஓகே கூறியுள்ளார் என்றும் சில தகவல்கள் கூறப்படுகிறது

From around the web