தாயின் மரணப்படுக்கையில் சமையல் கற்றேன்... தந்தையின் அறிவுரையை கேட்டேன் - ஷகிலா

தனது தாயின் மரணப்படுக்கையில் தான் அவரிடம் சமையல் கற்றுக் கொண்டதாகவும், தந்தையின் அறிவுரையை கேட்டு பொய் சொல்வதில்லை.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. 

போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. 

அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பவர் கொடுத்திருப்பவர் ஷகிலா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரைப் பற்றி அபிப்பிராயம் முற்றிலுமாக மாறிவிட்டது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில் நடிகை ஷகிலா அளித்திருக்கும் பேட்டியில் அவர் கூறும் பொழுது தனது தாயின் மரணப்படுக்கையில் தான் அவரிடம் சமையல் கற்றுக் கொண்டதாகவும், தந்தையின் அறிவுரையை கேட்டு பொய் சொல்வதில்லை முற்றிலுமாக தவிர்த்த தருணம் பற்றி எல்லாம் கூறியுள்ளார்.

மேலும் தனது வாழ்க்கையில் பெரிதாக கஷ்டபட வில்லை என்றும், கடவுளின் அருள்தான் எல்லாமே, தான் மனதில் நினைத்ததை அவர் தந்து விடுவதால் அவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்பது போன்ற நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் பேட்டியளித்துள்ளார்.


 

From around the web