’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஷகிலா: ஆச்சரிய அறிவிப்பு!

 

விஜய் டிவியில் பிரபலமான ’குக் வித் கோமாளி’ என்ற ஷோவும் ஒன்று என்பது தெரிந்ததே. ஏற்கனவே முதல் சீசனில் இந்த ஷோ மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது 

’குக் வித் கோமாளி’ சீசன் 2க்காக தான் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப் பட்டார் என்றும் ஒரு வதந்தி வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவி இந்த ’குக் வித் கோமாளி’ இரண்டாவது சீசனில் பங்குகொள்ளும் 5 போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

cook with comali

இதில் ஆச்சரியத்தக்க ஒரு விஷயம் என்னவெனில் பிரபல மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து தர்ஷா குப்தா, பாபா, கனி மற்றும் தீபா ஆகிய நான்கு பேர்களும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக இருப்பதால் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் தற்போது அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web