திருநங்கை மகளை உலகிற்கு அறிமுகம் செய்த ஷகிலா

சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கும் மிளா ஒரு திருநங்கை.

 
திருநங்கை மகளை உலகிற்கு அறிமுகம் செய்த ஷகிலா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசனில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைத்திருக்கின்றன. முக்கியமாக ஷகிலாவை பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. 

தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி நடிகை சகிலா பெண் ஒருவருடன் புகைப்படங்கள் வெளியிடுகிறார். 

ரசிகர்கள் சிலர் இவர் யாரென்று கேட்க ஷகிலா அதற்க்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். 

அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

From around the web