ஷாருக்கான்-அட்லி திரைப்படம் முழுக்க முழுக்க வதந்தி: பாலிவுட் திரை உலகினர் கருத்து 

 

ஷாருக்கான் படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன

மேலும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 

ஆனால் பாலிவுட் திரையுலகில் விசாரித்த அளவில் இப்படி ஒரு படம் உருவாக வாய்ப்பே இல்லை என்றும் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பதாக முதலில் இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது அந்த எண்ணத்தை அவர் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது

எனவே ஷாருக்கானின் படத்தை இயக்குவது ராஜ்குமார் ஹிரானி என்றும் அந்த படம் முடிந்த பிறகு அவர் அடுத்த படத்தின் இயக்குனரை அவர் தேர்வு செய்வார் என்றும் அவர் அட்லீயாக இருப்பாரா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் ஷாருக்கான் வட்டாரங்கள் கூறுகின்றன 

எனவே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக தமிழ் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் கற்பனையே என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web