பிக்பாஸ் நிகழ்ச்சியால் சீரியல் நேரங்கள் மாற்றம்: பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் அதிருப்தி

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விஜய் டிவியில் அக்டோபர் 4 முதல் ஆரம்பமாகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதற்கான புரமோஷன் பணிகளையும் விஜய் டிவி தீவிரமாக செய்து வருகிறது

இந்த நிலையில் தினமும் 9.30 மணி முதல் ஒரு மணி நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதை அடுத்து விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் நேரங்கள் திடீரென மாற்றப்பட்டு உள்ளது 

ஏற்கனவே 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே என்ற சீரியல் இனி 7.30  மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இது வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனி அரை மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் 

அதேபோல் பாரதிகண்ணம்மா சீரியல் 8 மணி முதல் 9 முப்பது மணி வரையும் 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றத்தால் சீரியல் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

From around the web