பிரமாண்டமாக நடந்து முடிந்த சீரியல் நடிகையின் திருமணம்

நாம் இருவர் நமக்கு இருவர் நாடகத்தில் நடித்த நடிகைக்கு மிகவும் பிரமாண்ட முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
 

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக இரண்டாம் பாகமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் "நாம் இருவர் நமக்கு இருவர்". இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சீரியலின்  முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ராஷ்மி. 

இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்த சீரியலின் இரண்டு நடிகைகளும் திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு காரணம் வேறொன்றுமில்லை கொரோனா  காலத்தில் தனது வீட்டில் ஷூட்டிங்கிற்கு அனுமதிக்கவில்லை என்று ராஷ்மியே பிறகு கூறியிருந்தார். 

இந்நிலையில் நாம் இருவர் நமக்கிருவார் சீரியல் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார் ராஸ்மி. ஆம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது பிரம்மாண்டமாக கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் ரிச்சு என்ற மணமகனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web