பிரபல கட்சியில் இணைந்த செந்தில்.... யாருடன் சேர்ந்துள்ளார் தெரியுமா?

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், இன்று பாஜகவில் இனைந்தார் செந்தில்.
 
பிரபல கட்சியில் இணைந்த செந்தில்.... யாருடன் சேர்ந்துள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக விளங்கியவர் தான் நடிகர் செந்தில், கௌண்டமணி மற்றும் செந்தில் நடித்த காமெடி காட்சிக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உளள்து.

மேலும் இவர் கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செந்தில் முக்கிய அரசியல் காட்சிகளில் இணைவதும் பிரிவதுமாக இருந்த செந்தில், தற்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், இன்று பாஜகவில் இனைந்தார்.

மேலும் இது குறித்து பதிலளித்துள்ள செந்தில் "ஒரு நல்ல கட்சிக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன். பாஜக தான் நல்ல கட்சி, எல்லோருக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவையெல்லாம் கிடைக்கும் என எண்ணி, பாஜகவில் சேர நினைத்தேன். அதனால், பாஜகவில் இணைந்துவிட்டேன்" என கூறியுள்ளார்.

From around the web