மாரி, தெறி படங்களில் நடித்த செல்லதுரை காலமானார்

மாரி, தெறி போன்ற படங்களில் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்த செல்லதுரை காலமானார்.

 
மாரி, தெறி படங்களில் நடித்த செல்லதுரை காலமானார்

மூத்த நடிகர் செல்லதுரை அவர்களின் மரணம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் நேற்று கழிவறையில் சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார்.

அதைக்கண்ட குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர் உயிரிழந்தது தெரிந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்கின்றனர்.

இவர் சிவாஜி, கத்தி, மாரி, தெறி போன்ற படங்களில் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவரது இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2 மணியளவில் நடக்க உள்ளது.

From around the web