செம குத்தாட்டம்: ’ஈஸ்வரன்’ படத்தின் வீடியோ பாடல்!

 

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவர உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஈஸ்வரன்’ படத்தில் இடம்பெற்ற ’மாங்கல்யம் தந்துனானே’ என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார் 

சிம்பு மற்றும் ரோஷினி பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையில் உருவான இந்த பாடல் அட்டகாசமாக உருவாகி உள்ளது என்பதும் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

simbu nidhi

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்புவின் அட்டகாசமான குத்தாட்டத்தை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது என்பதும், அவருக்கு இணையாக நாயகி நிதிஅகர்வால் மிக அருமையாக டான்ஸ் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நல்ல இயற்கையான சூழ்நிலையில் கிராமத்து கெட்டப்பில் அமைந்துள்ள இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் அவரது ரசிகர்கள் இந்த பாடலை பாராட்டி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web