பல வருடங்கள் கழித்து வருகிறது நெஞ்சம் மறப்பதில்லை

பல வருடங்கள் கழித்து திரையரங்கில் செல்வராகவனின் முக்கிய திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் இவர் அடுத்தடுத்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கவுள்ளார். இந்நிலையில் SJ.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பே வெளியாகவேண்டிய திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆம் இது குறித்த ப்ரோமோ உடன் இயக்குனர் செல்வராகவன் அதிகாரபூர்வகமாக அறிவித்துள்ளார்.

From around the web