மூன்றாவது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த செல்வராகவன்!!!

தனது தனித்துவமான ஸ்டைலால் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இயக்குநர் செல்வராகவன்.
 

செல்வராகவன் தனுஷுடன் இணைந்து 'புதுப்பேட்டை 2' படம் குறித்து ரசிகர்களுக்கு செல்வராகவன் சர்ப்ரைஸ் தந்தார்.

அண்மையில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் எப்போதுமே  செல்வராகவனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இயக்குர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி இருவரும் கடந்த 2011 ஆம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம் கார் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையான மகன் ரிஷிகேஷ் சமீபத்தில் பிறந்திருந்த நிலையில் தற்போது, செல்வராகவன் அவரின் மூன்றாவது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் மனைவி வெளியிட்டுள்ளார்.

From around the web