’மூக்குத்தி அம்மன்’ படத்தை பாராட்டிய சீமான்: இதே மற்ற மதத்தை கிண்டலடித்தால் பாராட்டியிருப்பாரா?

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்.

மக்களை விழிப்பூட்டி எழச்செய்யும் வகையில் சமூகக்கருத்துக்களை நகைச்சுவையோடு தந்திருக்கிற இயக்குநர்கள் தம்பி ஆர்.ஜே.பாலாஜி, தம்பி என்.ஜே. சரவணன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

mookuthi amman

இந்த விமர்சனம் குறித்து நெட்டிசன்கள் கருத்து கூறிய போது ’இந்து மதத்தை கிண்டல் செய்து எடுத்த ஒரு திரைப்படத்தை பாராட்டும் சீமான், இதேபோல் மற்ற மதத்தை கிண்டல் அடித்து ஒரு திரைப்படம் வந்தால் அதை அனுமதிப்பாரா? அல்லது பாராட்டுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

மூக்குத்தி அம்மன் படத்தில் கூட வேறொரு மதத்தை கிண்டல் செய்யும் காட்சிகள் டிரெய்லரில் இருந்தன என்பதும் ஆனால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டன என்பதும் இதிலிருந்து பாலாஜி எந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக படத்தை இயக்கியுள்ளார் என்பது தெரிய வருகிறது என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர் 

நெட்டிசன்களின் இந்த குற்றச்சாட்டிற்கு சீமான் மற்றும் ஆர்ஜே பாலாஜி என்ன பதில் கூறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web