காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா: சூரரை போற்று படம் குறித்து பாரதிராஜா!

 

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இன்று ஓடிடியில் வெளியாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்து வருகின்றன. நேற்று இரவே இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி விட்டதை அடுத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் இந்த படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

95% இந்த படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்துள்ளதாகவும் சூர்யாவுக்கு ஒரு வெற்றிப்படம் கிடைத்து விட்டதாகவும் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. மேலும் சூர்யாவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று கூறலாம் 

bharathiraja

ரசிகர்கள், ஊடகங்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். நேற்று இயக்குனர் பாண்டிராஜ் உள்பட ஒரு சில பிரபலங்கள் சூரரைப்போற்று படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் இந்த படத்தை பார்த்து படக்குழுவினர்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சுதா கொங்காரா இயக்கத்தில் 
G v பிரகாஷ் குமார்
இசையில்
காற்றாய்
கவிதையாய்
கனலாய்..
காட்சிக்கு காட்சி
என் கண்களை
தெறிக்க விட்ட சுதா மற்றும்
மார்க்கண்டேயரின்
தவப்புதழ்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை
உங்களை சிகரத்தில்
சிறகடிக்கவைத்துவிட்டது
வாழ்த்துகள்..
சூர்யா
சுதாகொங்கரா
மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும்
பாராட்டுகளும்
வாழ்த்துக்களும்.

அன்புடன்
பாரதிராஜா

இவ்வாறு பாரதிராஜா தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்


 

From around the web