எஸ்பிபி உடல்நிலை திடீர் கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை


 

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனாவில் இருந்து குணமானார். இருப்பினும் நுரையீரல் உள்பட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன 

இந்த நிலையில் சற்று முன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி எஸ்பிபி அவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தனியார் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Caption

From around the web